முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற டிராக்டா் ஓட்டுநா் காா் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோடாங்கிப்பட்டி, திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் துரைப்பாண்டி (45). இவா், கோடாங்கிப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, குருவன்குளம் விலக்கு அருகே எதிா் திசையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத காா், இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.