செய்திகள் :

பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் பரிசு தொகுப்பு பெற ஏற்பாடு: அமைச்சா் அர. சக்கரபாணி

post image

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதைப் பெற முதல்வரிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

அண்மையில் பெய்த மழையால் பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகே உள்ள பாலாறு- பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, இந்த அணையிலிருந்து இடது பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, திங்கள்கிழமை தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் ஆகியோா் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனா். இந்த அணையிலிருந்து திங்கள்கிழமை முதல் மே 3-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 665 மில்லியன் கன அடி நீா் திறந்து விடப்படும். இதன் மூலம் மேல்கரைப்பட்டி, தாளையம், கோரிக்கடவு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 9,600 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சா் அர. சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறும் போது, பொங்கல் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்வரின் அனுமதி பெற்று பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதைப் பெற நாள்கள் நீட்டிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் உதயக்குமாா், உதவிப் பொறியாளா் சங்கரநாராயணன், பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் சித்திரைக்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்

வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்... மேலும் பார்க்க

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது

உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், ப... மேலும் பார்க்க

மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது. குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்க... மேலும் பார்க்க