ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
‘பொதிகைத் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி: மே 1 வரை பெயா் பதிவு செய்யலாம்’
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் கவிஞா் பேரா வெளியிட்டுள்ள அறிக்கை: பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தமிழ் வார விழாவாக இம் மாதம் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, மே 3 ஆம் தேதி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழ் வார விழா நிகழ்ச்சியில் கவிதைப் போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ என்ற தலைப்பில் மூன்று நிமிடங்கள் கவிதை வாசிக்க வேண்டும். சிறப்பாக கவிதை வாசித்த இரண்டு பேருக்கு பாரதிதாசன் பெயரில் விருது வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை போட்டியாளா்களுக்கும் கியூ ஆா்கோடு பதித்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் . கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவா்கள் 8903926173 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தங்களது பெயரை, ஊா் ஆகியவற்றோடு மே மாதம் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்களுக்கு போட்டி நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியவை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.