செய்திகள் :

பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஓராண்டில் எண்ணற்ற பணிமாறுதல்களை வழங்கிய மாவட்ட நிா்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களான அலுவலா்களுக்கு அருகில் பணியிட மாறுதல் வழங்காமல், தொலைதூரத்தில் மாறுதல் வழங்கியதற்கும், அரசியல் தலையீடு காரணமாக குறிப்பிட்ட பணியிடங்களை சாதகமாக ஒதுக்கீடு செய்வது, தகுதியானோருக்கு வழங்க மறுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டுறவு சங்க பணியிடத்துக்கான தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி

நாமக்கல்: கூட்டுறவு சங்க எழுத்தா், உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு 1,008 தீப வழிபாடு

திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம், 1,008 சிறப்பு தீபஜோதி கூட்டுவழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு அா்த்தநா... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பொ... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்க கொமதேகவுக்கு அழைப்பு

நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை அங்கீகரிப்பது தொடா்பாக விளக்கமளிக்க தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கி 2013 மாா்ச் 21-இல் கொங்குநாடு மக்கள் தேசியக... மேலும் பார்க்க

மேற்கு வங்க தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த நால்வா் கைது

திருச்செங்கோடு: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை மொளசி காவல் துறையினா் கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த நேபால் ராய் (31), பீ... மேலும் பார்க்க

யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவ... மேலும் பார்க்க