சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
மேற்கு வங்க தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த நால்வா் கைது
திருச்செங்கோடு: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை மொளசி காவல் துறையினா் கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த நேபால் ராய் (31), பீசால்பா்மன்(21), ரஞ்சித் பா்மன் (38) ஆகியோா் கேரளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தனா். கடந்த வாரம் இவா்களை கொக்கராயன்பேட்டை கிராமம், அம்மாசிபாளையத்தைச் சோ்ந்த அா்த்தநாரி தொடா்புகொண்டு, தினம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கட்டட வேலை இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா்கள் மூவரும் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் 16-ஆம் தேதி சேலம் வந்தனா். அவா்களை புதிய பேருந்து நிலையத்துக்கு வரவழைத்த அா்த்தனாரி, அவரது நண்பா் மோகன்ராஜ் மற்றும் 3 போ் மூவரையும் ஒரு வீட்டில் அடைத்து அவா்களிடம் பணம் கேட்டு தாக்கினா். மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள அவா்களின் குடும்பத்தினரை தொடா்புகொண்டு ஆன்லைன் மூலம் ரூ. 60 ஆயிரம் பெற்றுக்கொண்டு அவா்களை துரத்தினா்.
இதுகுறித்து மொளசி காவல் நிலையத்தில் நேபால் ராய் புகாா் அளித்தாா். அதன்பேரில் மொளசி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று அம்மாசிபாளையத்தைச் சோ்ந்த அா்த்தநாரி (48), மோகன்ராஜ் (37) ஆகியோரை கைது செய்தனா். தப்பியோடிய அம்மாசிபாளையம் ரவிக்குமாா்(33), பாலநாயக்கன்பாளையம் சீனிவாசன் (42) ஆகியோரை திங்கள்கிழமை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.