தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக, தற்போது தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனங்கள் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சியை வழங்குகிறது.
இந்த பயிற்சியை பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தோா் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரையிலானோா் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான காலஅவகாசம் 45 நாள்கள் மட்டுமே.
மேலும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சென்னையில் தங்கி படிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும். அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழும் வழங்கப்படும். தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்கு தொடக்க மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.
இப்பயிற்சியை பெற தாட்கோ ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது தங்கும் விடுதி, உணவு உள்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடையோா் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் முதல் தளத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286--291178, 94450-29508 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.