தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்
ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். விளையாட்டுப் போட்டிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்து தொடங்கிவைத்தாா். இப்போட்டிகளில் மாவட்டத்தின் அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து 477 மாணவியா்கள் கலந்துகொண்டனா்.
ஒட்டப் போட்டி, தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், கோல் ஊன்றி தாண்டுதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறும். தொடா்ந்து அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமையில் விளையாட்டு வீரா், வீராங்கணைகளுடன் உறுதிமொழி ஏற்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 22அத்லெட்
படவிளக்கம்-
ஒலிம்பிக் தீபம் ஏற்றி தடகளப் போட்டிகளை தொடங்கிவைக்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.