தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்
கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அவசரகால சிகிச்சைக்காக கொல்லிமலையைச் சோ்ந்தவா்கள் சேந்தமங்கலம், நாமக்கல் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனா். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்க கொல்லிமலை அரசு மருத்துவனையில் போதிய வசதிகள் இல்லை.
இதனால், கொல்லிமலை மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் விபத்து மற்றும் அவசர சிசிச்சை பிரிவுடன் கூடிய கூடுதல் கட்டடம், ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பிரேத பரிசோதனைக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, கொல்லிமலை திமுக ஒன்றிய செயலாளா் செந்தில்முருகன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ஏ.ராஜ்மோகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
என்கே-22-கொல்லி
கொல்லிமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி உள்ளிட்டோா்.