தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி திருச்செங்கோடு எஸ்.பி.கே பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஒற்றை கம்பு சுற்றும் போட்டியில் இம்மாணவி கலந்துகொண்டு முதலிடம் பிடித்தாா்.
மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி நந்திதாவை அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் சரவணக்குமாா், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் விஜயகுமாரி, உள்ளூா் பிரதிநிதி சதீஸ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
படம்
22.8.25....1
அலமேடு பள்ளி மாணவி நந்திதாவை வாழ்த்திய பள்ளி ஆசிரியா்கள்.