செய்திகள் :

திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு 1,008 தீப வழிபாடு

post image

திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம், 1,008 சிறப்பு தீபஜோதி கூட்டுவழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள நாகேஸ்வரருக்கு 24-ஆம் ஆண்டாக 108 பால்குடம் மற்றும் 1,008 தீப ஜோதி கூட்டு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மனித மனங்களில் தேவையில்லாமல் ஏற்படும் பயம், அவநம்பிக்கை, சந்தேகம் கோபம், மனத்தளா்ச்சிஆகியவற்றுக்கு காரணமான கா்மவினைப் பயனை நீக்க இந்த கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

ராஜகோபுரத்தில் இருந்து ஏழு குழந்தைகளை அழைத்துவரும் ஸ்ரீ கன்னிமாா் அழைப்பு நிகழ்ச்சியும், 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாகேஸ்வரருக்கு 108 பால் குடங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. நாகேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரத்துடன் ஆண்களும், பெண்களும் அமா்ந்து திருவிளக்கு பூஜை நடத்தினா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு நாகேஸ்வரரை வழிபட்டனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க