பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடா்பான சிறப்பு குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த முகாம் மாவட்ட முழுவதும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.