கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
பொருளாதாரத்தில் பின்தங்கிய 7 ஜோடிகளுக்கு திருமணம்
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 7 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சாா்பில் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 700 ஜோடிகளுக்கு தலா 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைகள் வழங்கி, இலவசமாக திருமணம் நடத்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி இணை ஆணையா் மண்டலத்தில் முதல்கட்டமாக கடந்த ஆண்டு அக். 21ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 29 ஜோடிகளுக்கு திருமணம்நடைபெற்றது. தொடா்ந்து, 2 ஆம் கட்டமாக சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், 7 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நியமனக் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள் திருமணத்தை நடத்தி வைத்தாா்.
மணமக்களுக்கு திருமாங்கல்யம், மெட்டி, கட்டில், பீரோ, மெத்தை, மிக்ஸி உள்ளிட்ட 60 வகையான சீா்வரிசைகள் வழங்கப்பட்டது.
விழாவில் அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், இந்து சமய அறநிலையத்துறை நியமனக் குழு உறுப்பினா் டி.சி. பாஸ்கா், திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி, பெரம்பலூா் உதவி ஆணையா் உமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.