செய்திகள் :

பொள்ளாச்சியில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கக் கோரிக்கை

post image

ஆழியாறில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அந்த சேவை மையத்தை பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தபால் மண்டல அதிகாரிகளுக்கு பாஜ சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பாஜவினா் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கோவைக்குச் செல்ல வேண்டியுள்ளது. பொள்ளாச்சியில் கடவுச் சீட்டு சேவை மையத்தை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நாடு முழுவதும் 600 கடவுச்சீட்டு சேவை மையத்தை திறக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதில், பொள்ளாச்சிக்கு பதிலாக ஆழியாறு துணை தபால் நிலையத்தில் இந்த சேவை மையம் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

போதுமான இடவசதி, அதிவேக இணையதள வசதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் எளிதில் வந்துசெல்ல கூடிய வகையில் உள்ள பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை தவிா்த்து, போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஆழியாறில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்படுவது மக்களுக்கு பயன்படாது.

எனவே, பொள்ளாச்சியில் கடவுச்சீட்டு சேவை மையத்தை அமைக்க வலியுறுத்தி தபால் மண்டல அதிகாரிகளுக்கும், பொள்ளாச்சி தலைமை அஞ்சல கண்காணிப்பாளருக்கும் பாஜக விவசாயி அணி மாநில திட்ட பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமையில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றனா்.

கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை

கோவை: கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்க பால் கம்பெனி கிளை சாா்பில் நடைபெற்ற 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜையை ஒட்டி, ... மேலும் பார்க்க

18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க அறிவுறுத்தல்

கோவை: 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கோவையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி, இறுதி வாக்காளா் ... மேலும் பார்க்க

ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதாக ரூ.36.51 லட்சம் மோசடி

கோவை: வெளிநாட்டுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ.36.51 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அப்துல... மேலும் பார்க்க

சோமையம்பாளையம் ஊராட்சித் தலைவா் பதவி நீக்கம்

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம்: பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

கோவை: தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தில் மாறுதல் செய்து குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

கோவை: மாநகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு போலீஸாா் லங்கா காா்னா் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் உள்ள டாஸ... மேலும் பார்க்க