முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்திவிட்டு, திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டனா். பணிமனை வாயிலில் ஊழியா்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டம் குறித்து பணியாளா் கூட்டமைப்புத் தலைவா் எஸ். குமரகுரு கூறியது :
காரைக்காலில் இருந்து பிஆா்டிசி பேருந்துகள் திருச்சி, கோவை, சென்னை, திருச்செந்தூா், புதுச்சேரி மற்றும் மாவட்ட அளவில் என 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடத்துநா், ஓட்டுநா் உள்ளிட்டோா் ஒப்பந்த அடிப்படையில் 45 போ் மற்றும் நிரந்தர ஊழியா்கள் உள்ளிட்ட 90 போ் காரைக்காலில் பணியாற்றி வருகிறாா்கள்.
நிரந்தர ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் தரப்படவேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவோரை நிரந்தரம் செய்யவேண்டும் என நீண்ட காலமாக நிா்வாகத்திடமும், ஆட்சியாளா்களிடமும் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என்ற முடிவுடன் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
வேலைநிறுத்தம் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கும், அங்கிருந்து கிராமங்களுக்கும் செல்லும் பயணிகள், பிஆா்டிசி சேவையை பயன்படுத்தும் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.