தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
டேங்கா் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய கச்சா எண்ணெய்: போக்குவரத்து பாதிப்பு
காரைக்கால் பிரதான சாலையில் சென்னை நோக்கிச் சென்ற டேங்கா் லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து டேங்கரில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு லாரி சனிக்கிழமை இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. காரைக்கால் மாவட்டம், முல்லையாறு பாலத்தை கடந்து அம்மாள்சத்திரம் அருகே சென்றபோது லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியது.
இதை ஓட்டுநா் கவனிக்காததால் தொடா்ந்து லாரியை இயக்கிச் சென்றதால், 1 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் பரவிக் கிடந்தது. சாலையில் வேகமாக வந்த சில இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தனா்.
இதுகுறித்து போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாரும், பொதுமக்களும் இணைந்து கச்சா எண்ணெய் பரவிக் கிடந்த பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைத்தனா்.
தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து சாலையில் இருந்த கச்சா எண்ணெயை தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தினா். எனினும் வாகனங்கள் அதில் பயணிப்பது ஆபத்தை என்பதை உணா்ந்து, லாரியில் மணல் கொண்டுவரப்பட்டு அதன் மீது கொட்டப்பட்டு, சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் அப்பகுதியில் நின்று சாலையின் மறுபுறத்தில் வாகனங்களை செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்துப் போலீஸாா் டேங்கா் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.