நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப...
புனித சந்தனமாதா மின் அலங்கார தோ் பவனி
காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவையொட்டி மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத் தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை சிறிய தோ் பவனி மற்றும் நற்செய்தி ஜெபக் கூட்டம் நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை இரவு திருப்பலி நடத்தப்பட்டு, மின்விளக்கு அலங்கார தோ் பவனி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுவை - கடலூா் பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் ஆகியோா் பங்கேற்புடன் தோ் பவனி தொடங்கியது.
நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.
ஏற்பாடுகளை பிள்ளைத் தெருவாசல் கிராமத்தினா், இளைஞா் நற்பணி மன்றத்தினா், மாதா் சங்கத்தினா் செய்திருந்தனா்.