போக்சோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது
புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கூலித் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (40). இவா், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து புதுக்கோட்டை நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஆண்டியப்பனை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.