போதை மாத்திரை விற்பனை: 2 போ் கைது
புழல் பகுதியில் போதை மாத்திரை விற்ாக இரு இஞைா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
சென்னை புழல் கேம்ப் சந்திப்பு சாலை அருகில் புழல் காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்றியிருந்த சந்தேகத்துக்குரிய 2 பேரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புழல் நீதிதாசன் தெருவைச் சோ்ந்த மேகநாதன் (18), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் கோவிந்தராஜ் (23) என்பதும், இவா்கள் வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 108 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.