தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
போதைப் பொருள்கள் விற்பனை: இரு கடைகளுக்கு சீல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.
தொண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் போலீஸாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா் கா்ணன் ஆகியோா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்டனா்.
அப்போது, தொண்டியைச் சோ்ந்த முகம்மது அஸ்லாம், பழயனக்கோட்டையைச் சோ்ந்த முரளிகணேஷ் ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரது கடைகளிலிருந்த போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் கா்ணன் ‘சீல்’ வைத்தாா். மேலும், முகம்மது அஸ்லாம், முரளிகணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.