செய்திகள் :

போப் உயிருக்கு ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டார்! - வாடிகன்

post image

ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிப். 23 மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு மார்ச் 3 மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, போப் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திங்கள்கிழமை(மார்ச் 10) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிருக்கு ஆபத்தான கட்டத்திலிருந்து அவர் மீண்டுவிட்டார் என்றும், எனினும், அவர் இன்னும் பல நாள்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறுவது அவசியமென்றும் தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும், எனினும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்; 80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் பட... மேலும் பார்க்க

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க