துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
மகளிர் யூரோ: கூடுதல் நேரத்தில் முதல் கோல்..! ஸ்பெயின் இறுதிப் போட்டிக்குத தகுதி!
மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின் அணி வென்றது.
ஸ்விட்சர்லாந்தில் லெட்ஸிக்ரண்ட் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜெர்மனியும் ஸ்பெயின் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் இருந்தன. பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
கூடுதல் நேரத்தில் 113-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் அணியின் ஐதானா பொன்மாட்டி கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் 67 சதவிகித பந்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 86 சதவிகித துல்லியத்துடன் 720 பாஸ்களை செய்து அசத்தியது.
கடந்தாண்டு மகளிருக்கான பேலந்தோர் (தங்கப் பந்து) விருதை பொன்மாட்டி வென்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்துடன் மோதுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் இவ்விரு அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி அரையிறுதியில் இதுவரை 10இல் 9 முறை வென்றிருக்க ஸ்பெயின் அந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.