அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
மகளிர் ஹாக்கி: ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த இந்தியா!
எப்.ஐ.எச். புரோ லீக் மகளிர் ஹாக்கி தொடரில் ஸ்பெயின் அணியிடம் இந்திய மகளிர் அணி 3 - 4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது.
எப்.ஐ.எச். புரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பித்த 19வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பல்ஜீத் கெளர், ஒரு கோல் அடித்தார். இந்திய மகளிர் அணி முன்னிலையில் இருந்த நிலையில், ஸ்பெயின் ஒரு கோல் அடித்து தனது கணக்கைத் தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முவிடில் ஸ்பெயின் அணி 3 - 4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.