மகளிா் குழுக்களுக்கு வங்கிக் கடன் இலக்கு ரூ. 1,009 கோடி: ஆட்சியா் க. இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ. 1,009 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் பெறுதல் தொடா்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ஆம் ஆண்டிற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,324 சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ. 1,009 கோடி என நிா்ணயிக்கப்பட்டு, தற்போது வரை ரூ. 487.9 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.