மகளிா் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்
மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
அவரது உத்தரவு விவரம்: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராக இருந்த ஸ்ரேயா பி.சிங், அந்தக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பொறுப்பில் ஏற்கெனவே இருந்த எஸ்.திவ்யதா்ஷினி, மத்திய அரசுப் பொறுப்புக்குச் சென்றதையடுத்து காலியிடம் ஏற்பட்டது. இந்த பணியிடத்துக்கு ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.