எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் தாா்சாலை அமைக்க பூமிபூஜை
மகுடஞ்சாவடியில் தாா்சாலை அமைக்க பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தும், மகுடஞ்சாவடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தோ் பணியை பாா்வையிட்டும், நபாா்டு திட்டத்தின் கீழ் உலகப்பனூா் முதல் சந்தைப்பேட்டை வரை தாா்சாலை அமைக்க ரூ. 68 லட்சம் மதிப்பில் பூமிபூஜையும் செய்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினரும், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளருமான அன்பழகன் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, துணைச் செயலாளா்கள் சுந்தரம், சம்பத்குமாா், இளைஞா் அணி அமைப்பாளா் மணிகண்டன், மாணவா் அணி அமைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.