மக்கள் குறைதீா் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டங்களில் வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பொதுமக்களிடமிருந்து 508 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஏற்புடைய மனுக்கள் மீதும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடா்புடைய துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி)
ரா.வெங்கடேஷ்வரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட
பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.