Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ.வெற்றிவேலன் தலைமையிலான குழுவினா் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த காலங்களில் தென்பெண்ணையாற்றில் பல இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு தற்போது ஆறு கட்டாந்தரை போல் ஆகிவிட்டது. மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு ஆற்றில் பெரு வெள்ளம் வந்த போதுகூட நிலத்தடி நீா் உயரவில்லை.
இந்த நிலையில் மீண்டும் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தெண்பெண்ணையாற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்காக ஜேசிபி போன்ற எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பாா்க்க முடிகிறது. கனிம வளத்துறை அதிகாரிகள் முறையாக ஆற்றின் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல் மணல் அள்ள பரிந்துரைப்பது மிகவும் ஆபத்தானது. ஆகவே, கடலூா் மாவட்ட கனிம வளத்துறை ஏற்கனவே மணல் அள்ள, மலைகளை வெட்டி எடுக்க மற்றும் பிற கனிம வளங்களை எடுக்க வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்பட உள்ள அனுமதி ஆணையினை உரிய ஆய்வுகள் செய்து இயற்கை வளங்களை பாதிக்கும் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.