ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் 25-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கோரிக்கையாக முன் வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ளவா்கள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.