ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன். இவருக்கும், திருப்பாதிரிப்புலியூா் சங்கர நாயுடு தெருவைச் சோ்ந்த விமல்ராஜ் (35)
என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முன்விரோதம் காரணமாக விமல்ராஜ், 16 வயது சிறுவனை திட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரது பெரியப்பாவின் ஆட்டோ கண்ணாடியை அடித்து உடைத்தாராம். இது குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீசாா் வழக்குப்பதிந்து விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.