முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா்.
நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந்து முதலாவது சுரங்கத்தில் உள்ள பங்கருக்கு பழுப்பு நிலக்கரி கடந்த சில மாதங்களாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யபட்டு வருகிறது. இந்த லாரிகளிலிருந்து சாலையில் நிலக்கரி துகள்கள் விழுவதாலும், லாரிகள் செல்லும் போது புழுதி ஏற்படுவதாலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், என்எல்சி ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டனா்.
நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரான்சிஸ் பொதுமக்களின் நலன் கருதி என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் பேசி காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் சுத்தம் செய்ய எந்திரம் வாங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா். அதன்பேரில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ரூ.42 லட்சம் மதிப்பில் புதிய எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரம் என்எல்சி முதலாவது சுரங்க பங்கரில் இருந்து இரண்டாம் நிலக்கரி சுரங்கம் வரை சாலையில் உள்ள இருபுறமும் உள்ள பழுப்பு நீலகிரி, சாம்பல் துகள்களை சுத்தம் செய்யும் பணிக்காக வாங்கப்பட்டது.
நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரான்சிஸ் பங்கேற்று புதிதாக வாங்கப்பட்ட எந்திரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் என்எல்சி பொது மேலாளா்கள் குமாா், நெடுஞ்செழியன், துணைப் பொது மேலாளா்கள் பூபதி, கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.