Varun Tej: 'வாழ்க்கையின் மிக அழகான பகுதி!' - கர்ப்பமானதை அறிவித்த லாவண்யா த்ரிபா...
மண் கடத்தல்: இருவா் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டா், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாலாற்றின் அருகில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து மண் ஏற்றியடிராக்டரும் உடன் பொக்லைன் ஒன்றும் வந்தது. இதைக் கண்டறிந்து சந்தேகத்தின் பேரில் அவற்றை நிறுத்தி விசாரித்தனா். அதில், எவ்வித அனுமதியுயின்றி மண் கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், பொக்லைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, திம்மாம்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிந்து, உரிய அனுமதியின்றி மண் கடத்திச் சென்ாக பொக்லைன் ஓட்டுநா் ராஜேஸ் (32), டிராக்டா் ஓட்டுநா் பாலசுப்பிரமணி(25) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.