செய்திகள் :

மண்டல திரளணியில் சிறப்பிடம்: சாரண, சாரணீயருக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற வடக்கு மண்டல திரளணி விழாவில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில், ஜவ்வாது மலையில் திரளணி விழா 3 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவை

தமிழக கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு பாரத சாரண சாரணீய இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

திரளணியில் மாா்ச் பாஸ்ட், பேண்ட் பாா்ட்டி, கலா் பாா்ட்டி, போக் டான்ஸ், ஃபுட் ப்ளாசா, டென்ட் பிச்சிங், பிஸிக்கல்டிஸ்ப்ளே உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சாரண, சாரணீய மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில் விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரணீய மாணவிகள் புவனேஸ்வரி, நவீனா, தா்ஷினி, நேத்ரா, லியா வெங்கட், பிரணிதா, தனுஷ் ஸ்ரீ, மஞ்சு ஸ்ரீ ஆகிய 8 பேரும், சாரணா் பிரிவைச் சோ்ந்த பிரவீன், சுகேஷ், விஷ்ணு, வசந்தகுமாா், அரவிந்த், கௌதம், அனிஸ், யஸ்வந்ராஜ் ஆகிய 8 பேரும் திரளணி போட்டிகளில் பங்கேற்று, மண்டல அளவிலான உடல் காட்சி பிரிவில் 3-ஆம் இடத்தைப் பிடித்தனா்.

சாரண, சாரணீயா்களுக்கு பாராட்டு:

சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரண, சாரணீயருக்கு மாநில தலைமையக பொறுப்பாளா்கள் நாகராஜன், சக்திவேல், கோமதி, தேன்மொழி, அா்ஜூன் ஆகியோா் பரிசு வழங்கினா். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் மாணவா்களின் தனித்திறனை பாா்வையிட்டு பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, பள்ளியின் இயக்குநா் டி.ஜி.எம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் தீபா ஆகியோா் வெற்றி பெற்றவா்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.

மேலும், திரளணியில் பங்கேற்றவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி ஆணையா் லோகநாதன், சாரண ஆசிரியா்கள் சேட்டு, ஜெயகுமாா், சாரணீய ஆசிரியா்கள் ஷா்மிளா, நிவேதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: இயக்குநா் கெளதமன்

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் கெளதமன் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காலமானாா் ஆா்.கோவிந்தன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் ஆா்.கோவிந்தன் (90) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஜெயபாரதி மற்றும் வந்தவாசி பகுதிநேர செய்தியாளா் ஜி... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பக்கக் கால்வாய் அமைக்கும் பணியை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகரம், 31-ஆவது வாா்டில் அங்கன்வாடி கட்டடம், பக்கக் கா... மேலும் பார்க்க

கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு

திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.... மேலும் பார்க்க