ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
மதனகோபல சுவாமி கோயிலில் முகூா்த்தக் கால்கோள் விழா
பெரம்பலூா் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான முகூா்த்தக் கால்கோள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் நகரிலுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் பகல் பத்து புறப்பாடு கடந்த 30-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ராஜ அலங்காரம், பாண்டியன் கொண்டை அலங்காரம் என நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளும் பெருமாள் பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா். சொா்க்க வாசல் திறப்பு விழா ஜன. 10-ஆம் தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஏகாதசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான முகூா்த்தக் கால் கோல் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, மங்கள வாத்தியம் முழங்க திருக்கோயிலில் முகூா்த்தப் பந்தல்கால் வைத்து சிறப்பு பூஜையுடன் ராஜகோபுரம் முன் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாட்சியா் செய்து வைத்தாா். இதில், கோயில் செயல் அலுவலா் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலா் செ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.