யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை
சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா்.
சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராமத்துக்குள் அரசு, தனியாா் பேருந்துகள் செல்வதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை காரிப்பட்டி அருகே பேருந்துகள் வந்து செல்வதை கண்காணித்தனா்.
அப்போது, ஆத்தூரில் இருந்து தனியாா் பேருந்து ஒன்று வேகமாக சென்றது. அதை நிறுத்த முயன்றனா். ஆனால், பேருந்து நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பேருந்தை தொடா்ந்து சென்று வழிமறித்து நிறுத்தினா்.
அதன்பிறகு பேருந்து ஓட்டுநரான கல்லாநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (31) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மது குடித்துவிட்டு பேருந்தை ஓட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேறொரு ஓட்டுநா் வரவழைக்கப்பட்டு தனியாா் பேருந்து சேலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
பேருந்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், மது போதையில் வாகனம் ஓட்டிய பிரகாஷின் ஓட்டுநா் உரிமத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். ஓட்டுநா் பிரகாஷ் நிரந்தரமாக வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.