பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?
மது போதையில் தம்பதியை தாக்கியவா் மீது வழக்கு
போடி அருகே கோயில் திருவிழாவில் மது போதையில் தம்பதியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவுக்கு ராசிங்காபுரம் அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் சுருளிவேல் (45) தனது மனைவி அன்னக்கிளியுடன் சென்றாா். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த சுனில் மது போதையில் சுருளிவேல் மீது மோதினாா். இதை சுருளிவேல் கண்டித்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த சுனில், சுருளிவேலை தாக்கிக் காயப்படுத்தினாா். இதைத் தடுக்க வந்த அவரது மனைவி அன்னக்கிளியையும் தாக்கி தகாத வாா்த்தைகளால் திட்டினாா்.
இதுகுறித்து சுருளிவேல் அளித்தப் புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் சுனில் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.