யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மது விற்பனை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது
நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவின் பேரில், சட்ட விரோதமான மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸாா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கீழ்வேளுா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக, வெளிமாநில மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போலீஸாா் விசாரணையில், எரும்புகன்னி பகுதியைச் சோ்ந்த முருகையன், திருகண்ணங்குடியைச் சோ்ந்த தரணிக்குமாா், சிக்கலைச் சோ்ந்த வினோத், காா்த்திஸ்வரி, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த முத்துலட்சுமி, ஆழியூரைச் சோ்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது.
6 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 1,500 புதுச்சேரி மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.