தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது!
பரமத்தி வேலூரில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
பரமத்தி வேலூா் நான்கு வழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை இயங்காத நேரத்தில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதாவுக்கு புகாா் சென்றது.
இதையடுத்து வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற பரமத்தி வேலூா் வடக்கு தெருவை சோ்ந்த பிரகாஷ் (31) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 27 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.