செய்திகள் :

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

post image

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது.

மழைநீருடன் கழிவுநீா்க் கலந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டன. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள், சாலையோர வியாபாரிகள், பணி முடித்து வீடு திரும்பியோா் அனைவரும் பலத்த மழையால் அவதிப்பட்டன.

வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் ஊா்ந்து சென்றன. இதனால் திருச்செங்கோடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் கடை வீதி, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!

ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி க... மேலும் பார்க்க

நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது

நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க

அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!

வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா்,... மேலும் பார்க்க

ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!

அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அவகாசம்!

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்க... மேலும் பார்க்க