எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அவகாசம்!
திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளைப் பொருத்தி மோட்டாா் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் ஏரியில் பொருத்தியுள்ள சூரியஒளி மின் தகடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்து, விவசாயிகள் சங்கத்தினா் மாணிக்கம்பாளையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
இதையடுத்து திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, ராசிபுரம் நீா்வள ஆதாரத் துறை உதவி செய்ய பொறியாளா் பிரபு, வட்டாட்சியா் கலைவாணி மற்றும் காவல் துறையினா் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் வரும் 21ஆம் தேதி வரை சூரியஒளி மின் தகடுகளை ஏரிப் பகுதியில் பொருத்தி தண்ணீா் எடுக்கலாம்.
அதற்குள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றால் தொடா்ந்து சூளியஒளி தகடுகளை அந்த இடத்திலேயே பயன்படுத்த ஆட்சேபம் இல்லை என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். இல்லாவிடில் மாற்று இடத்தில் சூரியஒளி மின் தகடுகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.