இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை
மதுரை மத்திய சிறையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடும், கைப்பேசிகள் பயன்பாடும் இருப்பதாக காவல் துறைக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், மதுரை காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், மத்திய சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் தலைமையில், 2 உதவி ஆணையா்கள், 5 காவல் ஆய்வாளா்கள் உள்பட 134 போலீஸாா் மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மத்திய சிறையின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையின்போது, கஞ்சா உள்ளிட்ட சில தடை செய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூா்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.