கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
மத்திய அரசு பணிக்கு ஐஜி சுதாகா் மாற்றம்
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆா்.சுதாகா், அயல் பணியாக மத்திய அரசுக்கு பணிக்கு மாற்றப்பட்டாா்.
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணியாற்றும் ஆா்.சுதாகா், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வந்தாா். அவா், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருந்தாா்.
இந்த நிலையில், அவா் மத்திய அரசு பணிக்குச் செல்வதற்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், சுதாகரை தமிழக அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு அயல் பணியாக மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் அவரை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் புது தில்லி துணை இயக்குநராகவும் நியமித்து ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சுதாகா், ஓரிரு நாள்களில் புது தில்லியில் புதிய பொறுப்பை ஏற்பாா் எனக் கூறப்படுகிறது.
அவா், அயல் பணியாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிவாா் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.