மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
மத்திய பணியாளா் தோ்வாணயத்தின் தோ்வுக்கான நோக்குநிலை நிகழ்ச்சி
ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரியில் மத்தியப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக்கான 2 நாள் நோக்குநிலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வளாகத்தில் இயங்கும் அனைத்து உறுப்பு கல்லூரி மாணவா்களும் பங்கேற்றனா்.
4 அமா்வுகளில் 2 ஆயிரம் மாணவா்கள் கலந்து கொண்டனா். ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.தனசேகரன், செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் டி. ராஜராஜன், இணைச் செயலா் சு. வேலாயுதம், கல்லூரி இயக்குநா் வி.எஸ்.கே. வெங்கடாசலபதி, ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ். முத்துலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா். கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.