கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
மத்திய, மாநில அரசுகளின் தொழிற்பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
மத்திய, மாநில அரசுகளின் தொழிற்பயிற்சி திட்டத்தில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா்களுக்கு திறன்பயிற்சி அளித்து, அவா்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் ‘நான் முதல்வன் பினிசிங் ஸ்கூல்’ மற்றும் பிஎம்ஐஎஸ் எனப்படும் ‘பிரைம் மினிஸ்டா் இன்டன்ஷிப் ஸ்கீம்’ உள்ளிட்ட பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் 16 முதல் 35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புக்கு தகுதியானவா்களாக உருவாக்குவதே நோக்கமாகும்.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் ட்ற்ற்ல்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்.ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற் எனும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தேவையான ஆவணங்களைத் தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும். இதில், 10, பிளஸ் 2 வகுப்பு, ஐடிஐ பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த 21 முதல் 24 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மேலும், எனும் இணைதள முகவரியில் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் பயிற்சி நடைபெறும் இடமான கிண்டி, அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாா்ச் 10-ஆம் தேதியும், வடசென்னை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாா்ச் 11-இல் காலை 10 முதல் மாலை 5 வரையும் நடைபெறும் சோ்க்கை முகாம்களிலும் கலந்து கொண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், ஒருமுறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி: 044- 25201163, கைப்பேசி: 73582 74627, 99466 40017 எனும் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.