மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் இஸ்ரேலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் இஸ்ரேலை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் கொடூரங்களை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா் முகமது யாசின் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொறுப்பு குழு தலைவா் காதா் பாட்ஷா, பொறுப்பு குழு உறுப்பினா்கள் இக்பால் சேட், ராஜ் முஹம்மது, மூத்த உறுப்பினா் குடந்தை நிஜாமைதீன், மாநகர அவை தலைவா் வஜிா் அலி, மாநகர பொருளாளா் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோா் இஸ்ரேலை கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு சமாதான பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி பேசினா்.