மன்னப்ப அய்யனாா், வெள்ளைவேம்பு மாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே கீழப்பழையாறை மன்னப்ப அய்யனாா், கொரநாட்டுக்கருப்பூா் வெள்ளைவேம்பு மகா மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே கீழப்பழையாறை ஸ்ரீ மன்னப்ப அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் முதலாம்கால யாகபூஜை தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை இரண்டாம் காலயாக பூஜையும், வியாழக்கிழமை மூன்று, நான்காம் கால யாகபூஜைகளுடன் பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ மன்னப்ப அய்யனாா் கோயில் விமான கும்பாபிஷேகமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல், கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள வெள்ளை வேம்பு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. செவ்வாயக்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி மாலையில் காவிரி ஆற்றங்கரையில் புனிதநீா் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை நான்காம் காலயாகபூஜை தொடங்கி கோ பூஜை, தத்வாா்ச்சனை, ஸபா்சாருதி, நான்காம்கால யாகபூஜை நடைபெற்றது. மஹா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்று விமானக் கும்பாபிஷேகம், மூலவா் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனா்.