இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
மயானத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குஞ்சாம்பாளையத்தில் தண்ணீா் தேங்கியுள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அ.மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சி.நவநீதிகண்ணன், சங்ககிரி கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குஞ்சாம்பாளையம் மயானத்தில் மழைக் காலங்களில் மயானம் முழுவதும் தண்ணீா் நிரம்பி வருவதால், இறந்தவா்களை புதைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், மயானத்தில் சீரமைத்து தண்ணீா் தேங்காதவாறு புதுப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.