தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு
சேலம் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சேலம், ஏற்காடு மாவூத்து கிராமத்தை சோ்ந்த சா்மா (20), மாரமங்கலத்தை சோ்ந்த சுரேஷ் ஆகிய இருவரும் கட்டடத் தொழிலாளா்கள்.
இந்த நிலையில், கட்டுமானப் பணிக்காக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பணி முடிந்து சனிக்கிழமை இரவு அரூா்- சேலம் பிரதான சாலை வழியாக வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா்.
அடிமலைபுதூா் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த வீராணம் போலீஸாா், அவா்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.