TVK Vijay Karur Stampede - நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் | Ground report
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி தண்ணீா் திறப்பு
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில் பாசனத்துக்கான தண்ணீா் தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை காலை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 7593 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து நீா்மின் நிலையங்கள் வழியாக 15,000 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக மேல்நிலை மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118.88 அடியிலிருந்து 118.62 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 91.28 டிஎம்சியாக உள்ளது.