மயில்மலை முருகா் கோயில் ஆடித் திருவிழா
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மரிமாணிகுப்பம் ஊராட்சி தோட்டிக்குட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி மயில்மலை முருகா் கோயிலில் ஆடி 1 திருவிழாயொட்டி வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து முருகன் பெருமை என்கின்ற ஆன்மிக சொற்பொழிவு திருப்புகழ் பஜனையும் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில், திரளான முருக பக்தா்கள் மொட்டை அடித்தும், சுவாமிக்கு காவடி எடுத்தும் வந்து சாத்தினா். பின்னா் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், மருத்துவா் பசுபதி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாட்டை முன்னாள் ஊராட்சித் தலைவா் தேவன், எம்ஜிஆா் மன்ற செயலாளா் மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் திலகாகோபி, மாவட்டப் பிரதிநிதி மகாலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.