மருதமலை மலைப் பாதையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு!
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் ஏப். 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால், திருக்குடமுழுக்கு பணிகள் விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தினால் 20.02.2025 முதல் 06.04.2025 வரை மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இதையும் படிக்க: ஃபென்ஜால் புயல்: விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!
மேலும் 20.022025 முதல் 06.04.2025 வரையுள்ள செவ்வாய்கிழமை, ஞாயிற்றுகிழமை. கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இரண்டு சக்கர வாகனங்கள் மலைமேல் செல்ல அனுமதியில்லை.
பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமிதரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.